கல்வியில் வெற்றியடைய 21 வழிகள்


1. எப்போதும் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். கவலை, துயரம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய எண்ணங்களால் உங்கள் மனதை களங்கப்படுத்தாதீர்கள். முட்செடிகள் உள்ள இடத்தில் அழகிய பூக்கள் பூப்பது அரிதாகும்.

2. ஆசிரியர் உங்களுக்கு கற்றுத்தர முன்னர் நீங்கள் கற்பதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். நாளை ஆசிரியர் கற்றுத்தரப் போகும் பாடத்தை இன்றே கற்றுக்கொள்ளுங்கள்.



3. பாடம் தொடர்பான ஏனைய விடயங்களையும், தகவல்களையும் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. இரவில் அதிகம் தூக்கம் விழிக்காதீர்கள்

5. கடந்தகால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை அதிகம் செய்துபாருங்கள்.

6. தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற மின் திரைகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள்.

7. நீங்கள் கற்கும் விடயங்களை ஏனைய நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

8. நீங்கள் கற்கும் இடம் நன்று காற்றோற்றம் உள்ளதாக இருக்கவேண்டும்.

9. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம்தான் சிறந்த கல்வியின் அத்திவாரம் ஆகும். சுவர் சிறப்பாக இருந்தால்தான் அழகிய ஓவியம் வரைய முடியும்.

10. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்

11. அதிகம் வாசியுங்கள். புதிய புதிய புத்தகங்களை நேசியுங்கள்

12. தினமும் சுயகற்றலுக்கு 150 நிமிடங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள்

13. நிம்மதியாக தூங்குங்கள் - உங்கள் தூக்கம் எவ்வித தொந்தரவும் இன்றி அமையட்டும்.

14. நன்கு வெளிச்சமாக இடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்

15. ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு கற்க வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, சமய பாடத்தை பிறரோடு கலந்துரையாடுங்கள். வரலாற்றுப்பாடத்தை குறிப்பு எடுத்து கற்றுக்கொள்ளுங்கள். கணித பாடத்தை அதிகம் அதிகம் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்தையும் அதற்கேயுரிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்

16. அதிகம் தண்ணீர் அருந்துங்கள். அது உங்கள் மூளையின் செயற்பாட்டை துரிதப்படுத்தும். 

17. திட்டமிட்டு கற்றுங்கொள்ளுங்கள். நேர அட்டவணையை பயன்படுத்துங்கள்.

18. படுத்துக்கொண்டு படிப்பது, சாப்பிட்டுக்கொண்டு படிப்பது, பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது போன்ற அநாகரிக விடயங்களை விட்டுவிடுங்கள்

19. கற்கும் இடத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

20. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்காதீர்கள். இடைக்கிடை சிறிய இடைவேளைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

21. இறுதியாக இறைவனிடம் தஞ்சமடையுங்கள். அவன் அனைத்திற்கும் போதுமானவன். அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொண்டுவிட்டு இறுதியில் அழகான முடிவை அவனிடம் எதிர்பாருங்கள்


Comments