உலக சுற்றுச்சூழல் தினம்

 உலக சுற்றுச்சூழல் தினம்

பசுமை புன்னகைக்கும் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த உலகம். அமைதியாக, ஆனந்தமாக இந்த உலகில் வாழ்ந்துவிட்டு கடந்துசெல்லவேண்டிய நாம் எமது பேராசையாலும் பொடுபோக்காலும் இந்த உலகை அழித்துக்கொண்டிருக்கின்றோம். நமது நாசகார அநியாயங்களில் இருந்த இந்த பூமிப்பந்தை பாதுகாக்கும் இலக்குடன் ஒவ்வொரு வருடமும் ஜூன் 05ஆம் திகதிஉலகசுற்றாடல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகசுற்றாடல் தினத்தின் உருவாக்கம்

1972ஆம் ஆண்டு ஜூன் 05ஆம் திகதி ஸ்டொக்ஹோம் என்ற இடத்தில் ஒன்று கூடியஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதிகளால் ஒருங்கேமேற்கொள்ளப்பட்டதீர்மானத்தின் பிரகாரம் 'உலகசுற்றாடல் தினம்'பிரகடனம் செய்யப்பட்டது. முதலாவது சர்வதேச மனித சுற்றாடல் மாநாடும் ஸ்டொக் ஹோமிலேயே முதல் முறையாக நடைபெற்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது. அதைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டுமுதல் உலகசுற்றாடல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலகை அச்சுறுத்தும் சூழல் பிரச்சினை

2015 ஆம் ஆண்டில் சூழல் மாசடைதல் காரணமாக 25 இலட்சம் மக்கள் பலியாகிஉள்ளனர். இது உலக அளவில் மற்ற நாடுகளை விட அதிகம் எனமாசுமற்றும் சுகாதாரம் மீதான லான்சட் கமிஷன் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இரண்டாவதாக சீனாவில் மாசு காரணமாக 18 இலட்சம் மக்கள் பலியாகிஉள்ளனர். உலக அளவில் எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகியவற்றைவிட மூன்று மடங்கு அதிகமாக சூழல் மாசடைதல் காரணமாக பலி எண்ணிக்கை 90 இலட்சமாக இருந்தது. உலகெங்கும் உள்ள அனைத்து இறப்புக்களிலும் 6 ல் ஒருவர் சூழல் மாசடைதல் காரணமாக பலியாகிறார். வளரும் நாடுகளில் அதிகபடியாக சூழல் மாசடைவதாக லான்சட் மருத்துவ இதழில் அறிக்கை தெரிவிக்கிறது.

தொனிப்பொருள்

ஐக்கியநாடுகள் அமைப்பின் கீழ் இயங்கும்சுற்றாடல் சபையின் நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றிவருகின்றது. இவ்வாருடத்திற்கானதொனிப்பொருள் பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து உலகை வென்றெடுத்தல் எனபதாகும். இத்தினத்திற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இந்தியாவில்  நடைபெற்றது. 

பிளாஸ்டிக்கும் இன்றைய உலகும்

நெகிழி என்றுதமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் வாழ்வை இலகுவாக்க அறிமுகமாகியது. எனினும் இன்று மனித வாழ்வின் இருப்பையே கேள்வியாக்கி நகரின் அழகையும் சுற்றுச் சூழல் சுகாதாரத்தையும் பாதிக்கும் பொருளாகமாறியுள்ளது.பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்கமொழியில் 'பிளாஸ்டிக் கோஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையைசார்ந்தது.

பிளாஸ்டிக் பாவனையும் இன்றையஉலகமும்

•ஒவ்வொரு வருடமும் உலகில் 500 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றது

•எட்டுமில்லியன் தொன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்படுகிறது

•ஒவ்வொருநிமிடித்திற்குஒவ்வொருபிளாஸ்டிக் குப்பைகளைசுமந்தலொறி மூலம் கொட்டப்படுகறிது.

•ஒவ்வவொருநிமிடமும் 1 மில்லியன் பிளாஸ்டின் போத்தல்கள் விற்பனையாகிறது

•உலகில் குவியும் குப்பைகளில் 70 வீதம் பிளாஸ்டிக் குப்பைகளாகும்.

•அன்றாடம் பயன்படுத்ம் பொருட்ளகில் 90 வீதமானவைபிளாஸ்டிக்காககாணப்படுகிறது

•பயன்படுத்தப்படும் குப்பைகளில் 7 வீதம் மட்டுமே மீள் சூழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

•வளர்ச்சிஅடைந்தநாடுகளில் ஒருநபர் ஆண்டுக்குசராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார

பிளாஸ்டிக்கின் தீமைகள்

பசு,நாய்,கால்நடைகள்,வனவிலங்குகள் போன்றவைஉணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டிக் குப்பையைஉட்கொள்வதால் உணவுக் குழாய் அடைப்பாட்டினால் துன்புறவும்,மரணமடையவும் ஏதுவாகிறது.

வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணின் (உயிர்வேதியியல்) தன்மையைப் பாதிக்கிறது.

நெகிழிகுடிதண்ணீர் பாட்டில்கள்,குளிர்பானபாட்டில்கள் போன்றவைஎக்காலத்திலும் அழியாது. இவைகள் சாக்கடைகள் போன்ற இடங்களில் அடைத்துகொண்டுபல இன்னல்களைஏற்படுத்துகின்றன.

நம் அன்றாடவாழ்வில் தூக்கியெறியப்படும் பிரிக்காதகுப்பைகளினால் கொசுக்களால் பரவும் கொடிய நோய்கள் உருவாககாரணமாகிறது.

பிளாஸ்டிக் உறைகளால் அடைக்கப்பட்டபதப்படுத்தப்பட்ட,உணவுப்பொருட்களால் உடலுக்குபலஊறுவிளைகிறது.

கடல்,நீர்நிலைகள்,கழிவுச் சாக்கடைகள் போன்ற இடங்களில்

நெகிழிபைகளால்,கழிவுநீரில் தேக்கம் ஏற்பட்டுபுதியநோய்கள் பரவவும்,சுகாதாரக் கேடுஉருவாகவும் பிளாஸ்டிக் காரணமாகிறது.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூக்கிஎரியப்பட்டபிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள் மழைநீர் ஊடுருவிநிலத்தடிசென்றடைய இடையூறாகஉள்ளது.

பதப்படுத்தப்பட்டமற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டஉணவுப்பொருட்களைதவிர்க்கவேண்டும்.


தவிரப்பதற்கான நடவடிக்கைகள்


அன்றாடவாழ்வில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள்,டம்ளர்கள்,பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்தபொருட்களைதவிர்த்தல் வேண்டும்.

காப்பர் ஒயர்கள் போன்றவைகளைகண்ட இடத்தில் எரித்தல் கூடாது.

பிளாஸ்டிக் மறுசுழற்சி மறு பயன்பாடு

பிளாஸ்டிக் பாட்டில்கள்,பேக்கேஜிங் பைகள்,தொழிற்சாலைலைனர்கள்,சுருள்கள்,வணிகக் குப்பைகள்,மளிகைபொருட்கள் அடைக்கப்பட்டபிளாஸ்டிக் பைகள் போன்றவைகளைஉருமாற்றவோ,அழிக்கவோமுடியாது.


உலகின் புன்னகை நீடிக்கவேண்டும் என்றால் இதன் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அதன் முதற் படியாக முதற்தர எதிரியான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்றவை ஓரங்கட்டப்பட வேண்டும்.





Comments