சிறுவர் தினம் என்பது




இந்த உலகின் அற்புதமான வைர கற்கள் என்று சிறுவர்கள் கொண்டாடப்படுகின்றார்கள். அவர்கள்தான் நாளைய தலைவர்கள். அவர்கள்தான் நாளைய உலகத்தில் உருவாக்க வேண்டும்.இந்த நாளில் சிறுவர்கள் எதிர்காலத்திற்காக தம்மை செதுக்கிக் கொள்ள முன் வர வேண்டும்.


சிறுவர்கள் எவ்வாறு தம்மை செதுக்கலாம்?


1. நல்ல புத்தகங்களை வாசிப்பதில் ஊடாக தமது அறிவை வளப்படுத்தல்.


2. நல்ல பண்பாடுகளை வளர்த்து, தீய குணங்களில் இருந்து விலகி இந்த சமூகத்தின் சிறந்த அடையாளமாக மாறுதல்.


3. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், போதிய அளவு உடற்பயிற்சிகளை செய்தல் போன்ற விடயங்கள் ஊடாக தமது ஆரோக்கியத்தை பாதுகாத்தல்.


4.சிறந்த நண்பர்களைப் பெற்றுக் கொள்ளுதல். அவர்களுடன் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்


5. இந்த உலகம் திறமைகளுக்கான உலகம்.  உங்களிடம் திறமைகள் இருந்தால்தான் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். ஆகவே உங்களிடம் இருக்கும் திறமைகள் இனம் கண்டு அவற்றை வளர்த்து உங்களை நீங்கள் சாதனையாளர்களாக மாற்ற வேண்டியது உங்களது கடமையாகும்.


சிறகு விரியுங்கள்

சிகரம் வெல்லுங்கள் 

Comments