விழிகளாய் மாறும் ஆசான்

நீங்கள் இந்த எழுத்தை வாசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் முதலில் படைத்த இறைவனுக்கும் அடுத்ததாக எழுத்தறிவித்த ஆசிரியருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ஆசிரியர்கள் இந்த உலகத்தின் கண்கள் என போற்றப்பட காரணம் அவர்கள் தான் பார்வைகளை தருகின்றார்கள். எமது வாழ்வில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது எனவும் கற்றுத் தருகின்றார்கள். இந்த உலகம் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ந்தது? எவ்வாறு வளர்ச்சியடைந்தது என கற்றுத் தருகின்றார்கள்.

நாங்கள் எந்த பாதையில் சென்றால் உலகின் தங்க ஏடுகளில் எமது பெயரை பதிக்கலாம் என நினைவு படுத்துகின்றார்கள்.

தாயின் அன்பும் தாதியின் அரவணைப்பும்    தந்தையின் வழிகாட்டுதலும் ஆசிரியரிடம் தான் உள்ளன. தனது அத்தனை இயலாமைகளையும் கவலைகளையும் மறைத்து விழுங்கிக் கொண்டு, உலகின் ஒளி விளக்குகளை உங்களுக்கு பரிசளிக்க ஆசிரியர்களால் மாத்திரம் தான் முடியும்.


அறிவை கொண்டாடும் சமூகம் ஆசிரியர்களையும் புத்தகங்களையும் கொண்டாடும். நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் தமது குழந்தைகளுக்குப் பரிசளிக்க விரும்பும் சமூகம் ஆசிரியர்களை மதிக்கும்.

Comments