ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர்

'உலகம் என்பது நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள்'  என்ற பிரபல வாசகத்திற்குச் சொந்தக்காரர் ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர். நாடக கலையின் தந்தை என புகழப்படும் அவர் 37 அற்புதமான நாடகங்களை எழுதியும் மேடையேற்றியும் சாதனை படைத்துள்ளார். அவர்தான் நான் விரும்பும் எழுத்தாளர் ஆகும்.



இங்கிலாந்தின் ஏவான் நதிக்கரையில்  அமைந்திருக்கும் எழில் கொஞ்சும் ஸரற்போட் கிராமத்தில் 1564ஆம் ஆண்டு சித்திரை மாதம் 23ஆம் திகதி நாவலர் பிறந்தார். அவரின் தந்தை ஜோன் தோல் பதனிடும் தொழிலாளி ஆகும். அதனால், இளமையிலயே வறுமையின் இரட்டைச்சகோதரனாக வளர்ந்த அவர் தனது கிராமத்திலயே ஆரம்பக் கல்வியைக் கற்றுக்கொண்டார். 19 வயதில் திருமணம் முடித்த அவருக்கு இறைவன் இணையற்ற பரிசாக மூன்று குழந்தைகளை வழங்கினான்.  

1593ஆம் ஆண்டு வில்லியம் லண்டனுக்கு தொழில் தேடிச்சென்றார். இயல்பாகவே எழுதும் ஆற்றல்கொண்டிருந்த அவருக்கு அங்கு கிடைத்த வேலை பழைய நாடகங்களை புதுப்பித்து மெருகூட்டி எழுதுவதாகும். கரும்பு திண்ண கைக்கூலி வேண்டுமா?

வில்லியம் தனது வேலையை திறம்பட செய்தார். மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகங்கள், தேவ அதிசய நாடகங்கள், தெருக்கூத்து நாடகங்கள போன்ற நாடகங்களின் இயல்புகளையும் அரிஸ்டோட்டல் நாடகங்களின் சிறப்பியல்புகளையும் ஒன்றிணைத்து புதிய நாடகங்களை உருவாக்கி மகத்தான வெற்றி பெற்றார். இதுவரை இருட்டு மூலையில் தூக்கி வீசப்பட்டிருந்த நாடக்கலையை உயிர்ப்பித்து அரங்கேற்றினார்.

இதன்பின் தான் பிரித்தானியாவில் நாடக கலைக்கு முக்கியத்துவமும் நடிகர்களுக்கு மதிப்பும் வர ஆரம்பித்தது. நாடக அரங்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய வில்லியம் உயர்ந்த நாடக மேடை, அரை வட்ட வடிவான பார்வையாளர் கூடம், மேடைக்கு கீழ் வாத்தியகோஸ்டியை அமர்த்துதல்; போன்ற சீர்திருத்தங்களையும் 1611ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். 

ரோமியோ ஜுலியட், ஜுலியட் சீசர், நான்காம் ஹென்றி, வெனிஸ் நாட்டு வணிகன் போன்றவை வில்லியம் சேக்ஸ்பியர் எழுதி உலகப்புகழ் பெற்ற நாடகங்களாகும். வெறும் காதல் நாடகங்கள் மாத்திரம் அல்லாது அவர் துன்பியல் நாடகங்களையும் பிரசவித்தார். அவற்றுள் கிங் லியர், ஓதெல்லோ, ஹம்லட், மக்பெத் ஆகிய நான்கு நாடகங்களும் எத்தகையை கல் நெஞ்சையும் கரைத்து கண்ணீர் விடச்செய்யக் கூடியவை. அவர் எழுதிக்குவித்த ஆங்கிலக் கவிதைகளையும் உலகம் தலைக்கு மேல் வைத்து கொண்டாடியது. 

வில்லியம் சேக்ஸ்பியருடைய அற்புத நாடகங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் நாடகத்துறையின் தந்தை என போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார், முத்தமிழ் வேந்தர் சுவாமி விபுலானந்தர் ஆகியோர் அவரது நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். வில்லியம் சேக்ஸ்பியரின் நாடக எழுத்தாற்றலைக் கண்டு மெய்சிலிர்த்த சுவாமி விபுலானந்தர் அவருக்கு 'மதங்க சூளாமணி' என்ற பெயரையும் சூட்டினார்.

வெறும் தெருக்கூத்தாக இருந்த நாடகக்கலையை உலகம் போற்றும் உன்னதக் கலையாக உயர்த்த அற்புத எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் 1616ஆம் ஆண்டு சித்திரை மாதம் 23ஆம் திகதி நாடகமேடையான இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவர் வாழ்ந்த ஊர் இப்போது நாடகத்துறையின் புனிதத்தளமாக போற்றப்படுகின்றது.


Comments