ஆசிரியர்களை கொண்டாடுவோம்

 சர்வதேச ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. (ஒக்டோபர்-05)



கருவறையில் இருந்து இறங்கி நடக்க தட்டு தடுமாறு பயின்று கொண்டு உலகில் காலடி வைக்கும் எம்மைத் தத்தெடுத்து தரணியில் தலை நிமிர்ந்து வாழ வைக்கும் அற்புத உறவுகள் என்று  நாம் ஆசிரியர்களை கொண்டாடுகிறோம்.

ஆசிரியர்கள் நமக்கு பாடத்திட்டங்களை மாத்திரம் கற்றுத் தருவதில்லை. வாழ்க்கையையும் கற்றுத் தருகின்றார்கள்.  இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் எனவும் எவ்வாறு வாழ கூடாது எனவும் சொல்லித் தருகின்றார்கள். வெற்றிக்கான வழிகளையும் தோல்வியை தேடித்தரும் முறைகளையும் பிரித்தறிந்து சொல்லித் தருகின்றார்கள்.

ஆசிரியர்களின் கனவு ஒன்றே ஒன்றுதான். அது இந்த தரணியில் நாம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பது மாத்திரமே. இந்த வாழ்வை நாம் வெற்றி கொண்டு கதாநாயகர்களாக உலா வர வேண்டும் என்பதுவே.

தேனி தன் ஒட்டு மொத்த வாழ்நாளையும் செலவழித்து நமக்காக தேன் சேகரித்து தருவது போல ஆசிரியர்களும் தன் வாழ்நாளையும் சக்தியையும் நேரத்தையும் செலவழித்து அறிவைத் தேடி நமக்கு அமுதமாய் ஊட்டுகின்றார்கள்.

ஆசிரியர்களைக் கொண்டாடுவோம். அவர்களுக்காக பிராத்திப்போம்.

Comments